


ஆனந்த குடீர் பவுண்டேஷன்
பனி படர்ந்த இமைய மலை அடிவாரத்தில், சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி, ரிஷிகேஷின் உன்னத காட்சிகளை ஆழ்ந்து தியானித்துக் கொண்டு, சந்நியாசிகளின் புனித உறைவிடம் திகழ்கிறது. இங்கே தூரத்துக் குயிலின் இனிமையான பண்ணிசைப்பிற்க்கும், எப்போதோ கேட்கும் காட்டு மயிலின் அகவலுக்கும் ஏற்ப தாளலயத்துடன் தேனினும் இனிய ஷ்படிகமான புனித கங்கை ஓடி வருகிறாள். காவி அரை ஆடையுடன் ஒரு துறவி தனிமையில் கங்கைக் கரையோரம் ஒரு பாறாங் கல்லின் மேல் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். இது புராதன காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேதங்களை உலகிற்கு முதன் முதலாகத் தெரிவித்த பண்டைய முனிவர்களின் உண்ணிய நினைவுகளை நம்முள் எழுப்புகின்றன. உலகம் தோன்றின காலத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களின் அபிலாஷைகள் ஆன்மீக நம்பிக்கைகள் இந்த மண்ணில் ஆழமான தடங்களைப் பதித்திருக்கிறது. மேலும் இந்த மண்ணின் இதயம் குளிர் காற்றினாலும் எண்ணற்றவர்களின் பொங்கி எழும் நம்பிக்கைகளாலும் குழம்பித் தவிக்கிறது.
OUR SERVICES

YOGA

FREE MEDICAL CAMP

HEALTHCARE

BOOK DISTRIBUTION
DONATE US
Bank Details
Bank : Union Bank Of India
Branch : Town Hall Road, Madurai Main
A/c Name : Ananda Kutir Foundation
A/c No : 335102010911430
IFSC Code : UBIN0533513
SWAMI SIVANANDA


