ஆனந்த குடீர் பவுண்டேஷன்
பனி படர்ந்த இமைய மலை அடிவாரத்தில், சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி, ரிஷிகேஷின் உன்னத காட்சிகளை ஆழ்ந்து தியானித்துக் கொண்டு, சந்நியாசிகளின் புனித உறைவிடம் திகழ்கிறது. இங்கே தூரத்துக் குயிலின் இனிமையான பண்ணிசைப்பிற்க்கும், எப்போதோ கேட்கும் காட்டு மயிலின் அகவலுக்கும் ஏற்ப தாளலயத்துடன் தேனினும் இனிய ஷ்படிகமான புனித கங்கை ஓடி வருகிறாள். காவி அரை ஆடையுடன் ஒரு துறவி தனிமையில் கங்கைக் கரையோரம் ஒரு பாறாங் கல்லின் மேல் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். இது புராதன காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேதங்களை உலகிற்கு முதன் முதலாகத் தெரிவித்த பண்டைய முனிவர்களின் உண்ணிய நினைவுகளை நம்முள் எழுப்புகின்றன. உலகம் தோன்றின காலத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களின் அபிலாஷைகள் ஆன்மீக நம்பிக்கைகள் இந்த மண்ணில் ஆழமான தடங்களைப் பதித்திருக்கிறது. மேலும் இந்த மண்ணின் இதயம் குளிர் காற்றினாலும் எண்ணற்றவர்களின் பொங்கி எழும் நம்பிக்கைகளாலும் குழம்பித் தவிக்கிறது.
இதனினும் புனிதமாக, நமது ஸ்வாமிஜியின் தேவலோக உறைவிடம் ‘ஆனந்த குடிர்’ – அருகில் எண்ணற்ற ஆஷ்ரம்கள், தர்மசாலாக்கள் – இவற்றைக் கண்டும் காணாதது போன்ற தவனியில் துடிப்பான இன்றைய உலகில் தீர்மானகரமான நிச்சயிக்கப்பட்ட உறுதியுடன், அதே சமயம், நிச்சயம் இல்லாத நாளையைப் பற்றிக் கவலை கொள்ளாது, தனிமையில் நின்று கொண்டிருக்கிறது, மனித குலத்தின் மேல் கொண்ட ஆழமான அன்பு, தெய்வீக அறிவினைப் பரப்புவதில் நேர்மை, தனக்குத் தானே வரையறுத்த பாதையில் நடக்கும் உறுதி, இவற்றால் யாத்திரை ஸ்தலமாக ஓங்கி நிற்கிறது. களைத்துப் போன யாத்ரீகர்கள், அதன் கூரையின் கீழ், ஆன்மீக ஊற்றிலிருந்து ஆழமாக அருந்தி தனக்கு கிட்டிய உவந்த வரவேற்பினை அனுபவிக்கும் வண்ணம் ஆனந்தகுடிரில் தங்கிச் செல்கிறார்கள்.
வானுலகின் விண்மீன்கள் போன்று எண்ணற்ற முனிவர்கள், தெய்வத் தொண்டு புரிந்தவர்கள், தேசத்தின் நீள அகலங்களைப் பார்த்தவர்கள், உலகின் ஆன்மீக வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர்களால் பெருமை கொள்கிறது இந்தியா. இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது ஆனந்தகுடிரின் ஆன்மா. தெற்கிலிருந்து புறப்பட்டு வந்த சந்யாசி. நிவ்ரிதி மார்க்கத்திற்கு ஆசி சங்கராச்சார்யாவிற்குப் பிறகு, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் எப்படி ஆதர்சமோ, தினசரி வாழ்க்கையில் நடைமுறை வேதாந்தத்தின் குரு ஸ்வாமி ராம தீர்த்தர் எப்படியோ அப்படி அவர்கள் இருவரின் அறிவுரைகளையும் அவரின் செல்வாக்கிற்கு உட்பட்ட ஒவ்வொருவரின் மனதிலும் அமைதியாக உட்செலுத்துகிறார். யோகத்தின் சகல கிளைகளைப் பற்றியும் அவர் எழுதுகிறார். பக்தி வேதாந்தாவின் மீதும் புத்தொளி பாய்ச்சுகிறார். வேதாந்த சாதனாவிற்கு ஒரு புது அணுகுமுறை தருகிறார். நாம் அறியாத சமஸ்கிருதத்தில், அந்த முத்திரையிட்ட கையேட்டினுள் பொதிந்து கிடக்கும் பனி படர்ந்த இமைய மலை அடிவாரத்தில், சூரியன் உதிக்கும் கிழக்கு நோக்கி, ரிஷிகேஷின் உன்னத காட்சிகளை ஆழ்ந்து தியானித்துக் கொண்டு, சந்நியாசிகளின் புனித உறைவிடம் திகழ்கிறது. இங்கே தூரத்துக் குயிலின் இனிமையான பண்ணிசைப்பிற்க்கும், எப்போதோ கேட்கும் காட்டு மயிலின் அகவலுக்கும் ஏற்ப தாளலயத்துடன் தேனினும் இனிய ஷ்படிகமான புனித கங்கை ஓடி வருகிறாள். காவி அரை ஆடையுடன் ஒரு துறவி தனிமையில் கங்கைக் கரையோரம் ஒரு பாறாங் கல்லின் மேல் நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார். இது புராதன காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேதங்களை உலகிற்கு முதன் முதலாகத் தெரிவித்த பண்டைய முனிவர்களின் உண்ணிய நினைவுகளை நம்முள் எழுப்புகின்றன. உலகம் தோன்றின காலத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்களின் அபிலாஷைகள் ஆன்மீக நம்பிக்கைகள் இந்த மண்ணில் ஆழமான தடங்களைப் பதித்திருக்கிறது. மேலும் இந்த மண்ணின் இதயம் குளிர் காற்றினாலும் எண்ணற்றவர்களின் பொங்கி எழும் நம்பிக்கைகளாலும் குழம்பித் தவிக்கிறது.
இதனினும் புனிதமாக, நமது ஸ்வாமிஜியின் தேவலோக உறைவிடம் ‘ஆனந்த குடீர்’ – அருகில் எண்ணற்ற ஆஷ்ரம்கள், தர்மசாலாக்கள் – இவற்றைக் கண்டும் காணாதது போன்ற தவனியில் புனித இலக்கியங்களை அர்த்தப்படுத்துகிறார். ஆன்மீக அறிவைப் பரப்புதலே முழு ஒற்றுமையையும், வேதமற்ற தன்மையையும் தருகிறது, இந்த பூமியில் மனித சமூகத்தை அதன் குறிக்கோளான முழுமையான இலக்கு நோக்கி மேன்மையடைய வைக்கும் என்ற கருத்தினை முன் வைக்கிறார். Divine Life – தெய்வீக வாழ்க்கை என்று அவரால் மிக அழகாக வர்ணிக்கப் பட்ட தெய்வீகத் தன்மையை அடியொற்றிய, இந்த உலகில் ஒரு புதிய சொர்க்கத்தை ஏற்படுத்த ஆன்மீக மீளுருவாக்கம், மீண்டும் வலியுறுத்துதல், நிலையான முன்னேற்றம் பற்றின பிரபஞ்சம் போன்ற அனைத்தும் தழுவிய பார்வையை வெளிப்படுத்துகிறார்.
மனிதர்கள் மற்றும் ஒவ்வொரு ஜீவராசிகள் மீதும் அவருக்கு இருக்கும் அன்பு இயந்திரத் தன்மையது அல்ல, வெளிப்புறமானதும் அல்ல. ஏனெனில், நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராய் இருப்பினும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் தெய்வீகத் தன்மையுடன் இசைவு ஏற்படுதல் என்பது உயர்ந்த இலட்சியத்தின் ஒளியில் சாத்தியம் ஆகும் என்பதிலும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் தனித்துவமான நுண்ணறிவு இருக்கிறது என்பதிலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார், சத்யம், ஞானம், அனந்தம், பிரம்மன் – தெய்வீக உறைவிடத்திற்குள் வரும் ஒவ்வொருவர் மனதிலும் ஆணி அடித்தது போல இந்த மந்திரத்தையே பதிவு செய்கிறார் – இதுவே பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய காலத்தில், மனித சமூகம் உணர்ந்த நாகரீக விடியலின் போது, இது போன்ற மிகப் பெரிய முனிவர்களின் ஒளிரும் பிரகஞையை அவர் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.
அவர் வாழ்நாள் முழுவதுமான சாதனாவின் பின்னால் உள்ள உந்து சக்தி, கொள்கை, இலக்கு, பார்வை தான் என்ன? வாழ்க்கையில் சக பயணிகள் தீமை, துயரம், கண்ணீர் அச்சம் போன்றவற்றால் கிழிந்தெரியப் படும் போது, உள் நோக்கிய சுகானுபவமாக ஆன்மீக வழியில், அமைதியாக, தனிமையில் பயணம் செய்து கொண்டிருந்தார் சுவாமிஜி. தினசரி வாழ்வின் கஷ்டங்கள், துயரங்கள் எனும் பனித்திரைக்குப் பின்னால் மிக உன்னதமான தூய்மையின் ஒளிமயமான ஆத்மாவை, மிகச் சரியான நன்மையை, உலகளாவிய அன்பைப் பார்க்க முடிந்தது அவரால் தன்னை உணர்தலுக்கும், உச்ச சக்தியான தெய்வீகத்தைத் தரிசிப்பதற்கும் மிக அருகில் இவைதாம் அவரை இட்டுச் சென்றனர். இன்று இந்த இடையறாத சாதனா, எப்போதும் கூடுகின்ற ஆசை, ஆன்மீக வழியில் நாட்டமுடையோருக்கும் பணி செய்ய விருப்பம் – இவை எத்தனை நிதானமாக இருந்தாலும், அவரது வாழ்நாள் அவாவான ‘சரியான பாதையில் செல்லுதல்’ ‘மனித சமூகத்தையே கடவுள் தன்மை உடையதாக மாற்றும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு ஆகியன முன்னிலும் பிரகாசமாக ஜொலிகின்றன.
எனவே இது போன்றதொருவர் ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்த நம் பார்வையை மறைக்கும் அவித்யா என்ற மிக கடினமான திரையைக் கிழித்துக் கொண்டு பேரின்பம் என்ற மாசற்ற மனநிலைக்குள் நம்மை இட்டுச் செல்லட்டும்.